சிம்பு நாயகனாக நடித்துள்ள போடா போடி, வாலு ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்கு வேகமாக தயாராகி வருகின்றன.
இந்த படங்களை வெற்றி படமாக கொடுத்து விட வேண்டும் என்பதில் படுதீவிரமாக இருக்கிறார் சிம்பு.
ஆனால் இந்த படங்கள் எப்படி ரிலீஸ் ஆகிறது என்று பார்த்து விடுகிறேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.
அதாகப்பட்டது, சிம்பு ஏற்கனவே நடித்த ஒஸ்தி படத்தை தயாரித்தவர் டி.ரமேஷ்.
அந்த படத்தை இவரிடமிருந்து ரூ. 8 கோடிக்கு வாங்கி ரிலீஸ் பண்ணினார் சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர்.
ஆனால் அந்த 8 கோடியை இன்றுவரை ரமேசுக்கு தரவில்லையாம். அதனால் கடும் கோபத்தில் இருக்கும் அவர், எனக்குததர வேண்டிய மொத்த பணத்தையும் எண்ணி வைக்க வேண்டும்.
இல்லையேல் படங்களை வெளியிட தடை உத்தரவு வாங்கி விடுவேன் என்று மிரட்டல் விட்டிருக்கிறார். இதனால் மிரண்டு போயிருக்கிறார் சிம்பு.
0 comments:
Post a Comment