கிரீடம், தெய்வத்திருமகள், தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய், அடுத்து, நடிகர் விஜய்யை வைத்து, "தலைவன் என்ற படத்தை இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் விஜய் கூறுகையில், "நான் இதுவரை, ஐந்து படங்களை இயக்கி உள்ளேன்.
"தாண்டவம் படத்திற்கு பல தடைகள் இருந்தன. அதையெல்லாம் உடைத்து, படம் வெற்றி பெற்றுள்ளது.
தற்போது, அடுத்த பட வேலையில், "பிசி ஆகி விட்டேன். விஜய்யை வைத்து, அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றை இயக்குகிறேன்.
படத்திற்கு, "தலைவன் என, தலைப்பு வைத்துள்ளேன். பிரபல தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின், படத்தை தயாரிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடல் உருவாக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
விஜய்யின், "இமேஜ்க்கு ஏற்ற தலைப்பு என்பதால், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்கிறார், இயக்குனர் விஜய்.
0 comments:
Post a Comment