மாற்றான் - சினிமா விமர்சனம்


சூர்யாவின் அப்பா ஒரு ஆராய்ச்சியாளர். அவர் தனது மனைவிக்கு டெஸ்ட் டியூப் குழந்தை பிறக்கச் செய்கிறார். அது இரட்டைக் குழந்தையாக ஒட்டிப்பிறக்கிறது. 

ஒரு குழந்தை இதயத்துடனும், மற்றொரு குழந்தை இதயம் இல்லாமலும் இருக்கிறது. இதயத்துடன் இருக்கும் குழந்தை விமலன். மற்றொரு குழந்தை அகிலன். இதில் ஒரு குழந்தையை பிரித்து எடுத்து விடுங்கள் என்று டாக்டர்கள் சொல்ல, அவரது மனைவி மறுக்கிறார். இதனால் இருவரும் ஒட்டியே வளர்கிறார்கள்.

ஒருகாலக்கட்டத்தில் கஷ்டத்தில் இருந்த சூர்யாவின் தந்தை பால் பவுடர் ஒன்றை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து பெரிய கோடீஸ்வரரர் ஆகிறார். 

இவர் தயாரிக்கும் பால் பவுடரில் ஊக்க மருந்து கலக்கப்படுவதாக அறிந்த இக்வேனியா பெண்மணி ஆராய்ச்சி செய்ய சூர்யாவின் தந்தை நிறுவனத்திற்கு வருகிறார். இவருக்கு தமிழ் மொழி பெயர்ப்பாளராக காஜல் அகர்வால் வருகிறார். இங்கு சூர்யாவை சந்திக்கும் இவர் காதல் வயப்படுகிறார்.

சூர்யாவின் தந்தையின் நிறுவனத்தில் இக்வேனியா பெண்மணி சில படங்களை எடுத்து பென்டிரைவில் பதிவு செய்து வைக்கிறார். இதையறிந்த சூர்யாவின் தந்தை அந்த பெண்ணை கொலை செய்து விடுகிறார். இறப்பதற்கு முன்பு அந்த பென்டிரைவை விழுங்கி விடுகிறார்.

இதனை கைப்பற்ற சூர்யாவின் தந்தை முயற்சிக்கிறார். ஆனால் பென்டிரைவ் சூர்யாவின் கைக்கு கிடைக்கிறது. சூர்யாவிடம் இருக்கும் பென்டிரைவை கைப்பற்ற ஒரு கும்பல் இரட்டையரான சூர்யாவை தாக்குகிறது. இதில் விமலன் இறக்க நேரிடுகிறது.

உயிரோடு இருக்கும் அகிலன் பென்டிரைவரை வைத்து அதன் பின்னணி என்ன? ஏன் அந்த பெண் கொல்லப்பட்டார் என்பதை கண்டுபிடிப்பதே மீதிக்கதை.

சூர்யாவின் நடிப்பில் இன்னொரு பரிமாணம். அகிலன், விமலன் என ஒட்டி பிறந்த இரட்டையர் வேடத்தில் அசத்தியிருக்கிறார். வெளிநாட்டு பெண்மணிக்கு மொழி பெயர்ப்பாளராக வரும் காஜல் அகர்வால் நன்றாக நடித்திருக்கிறார். சூர்யாவின் அப்பாவாக வரும் சச்சின் கடேகர் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.

சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டம். பாடல் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ஒரு பாடல் அருமை. மற்ற பாடல்கள் பரவாயில்லை.

சண்டைக்காட்சிகளை பீட்டர் ஹெய்ன் பிரம்மாதமாக செய்திருக்கிறார். ஒட்டிப் பிறந்த சூர்யாவின் சண்டைக்காட்சிகள் அருமை.

கே.வி.ஆனந்த் சூர்யா கூட்டணியில் மற்றொரு வெற்றிப்படம். முதல் பாதி படத்தை அருமையாக கொண்டு சென்ற கே.வி. இரண்டாவது பாதி நீளமாகச் செல்வதை தடுத்திருக்கலாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...