சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சாக்ஸ் பிக்சர்ஸ் சக்ஸேனா படம் தயாரிக்கப்போவதாகவும். அந்தப் படத்துக்கு அவருக்கு 240 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் பரபரப்பாக செய்திகள் வெளியானது.
ஆனால் இதனை சக்ஸ்சேனா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எந்திரன் படம் தயாரிப்பில் இருந்தபோது இந்தப் படத்தை 210 கோடிக்கு வியாபாரம் செய்வேன் என்று ரஜினியிடம் சொன்னேன்.
அது முடியுமா ஏன்று ஆச்சர்யத்தோடும், சந்தேகத்தோடும் கேட்டார். செய்து காட்டினேன். சமீபத்தில் அவரை சந்தித்து பேசினேன்.
அப்போது நீங்க மட்டும் எனக்கு ஒரு படம் நடிச்சு தாருங்கள், 40 நாள் கால்ஷீட் போதும். உங்களோடு இன்னொரு ஹீரோ நடிப்பார்.
அந்தப் பபடத்தை 240 கோடிக்கு விற்று காட்டுகிறேன் என்று சொன்னேன். மீண்டும் ஆச்சர்யமாக முடியுமா என்று கேட்டார்.
நீங்கதான் இந்தியாவில் நம்பர் ஒன் கலெக்ஷன் மன்னன் நிச்சயம் முடியும் என்று சொன்னேன். சரி பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.
அவ்வளவுதான். அவரது படத்தின் வியாபாரம்தான் 240 கோடியே தவிர அவருக்கான சம்பளம் அல்ல. என்கிறார் சாக்ஸ்.
0 comments:
Post a Comment