25 படங்களுக்கு இசை அமைத்திருக்கும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் நடிகரானார். தற்போது திருடன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனிக்கு மணிரத்னம் இயக்கி வரும் கடல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
ஆனால் அது நேரம்கூடி வராததால் கைநழுவிப் போனது. நான் படத்தின் டிரைய்லரைப் பார்த்த மணிரத்னம்.
அதில் விஜய் ஆண்டனியின் மேனரிசங்களை பார்த்துவிட்டு தான் இயக்கி வரும் கடல் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிக்க வைக்க விரும்பினார்.
இதுகுறித்து தன் உதவியாளரிடம் சொல்லி வெளிநாட்டில் நடக்க விருக்கும் பாடல் காட்சிக்கு அவரை அழைத்து விமான டிக்கெட் எடுக்குமாறு கூறியிருக்கிறார்.
உதவியாளரும் விஜய் ஆண்டனியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
முதல் படம் வெளிவரும் முன்பே இப்படி ஒரு வாய்ப்பா என்று வியந்த விஜய் ஆண்டனி உடனே சம்மதித்திருக்கிறார். மீண்டும் மணிரத்னம் உதவியாளர் தொடர்பு கொண்டு ஒரு தேதியை சொல்லி அந்த தேதிக்கு டிக்கெட் எடுக்கட்டுமா என்று கேட்டிருக்கிறார்.
அந்த தேதி நான் ரிலீஸ் தேதி. நான் பட புரமோஷன் வேலைகளில் பிசியாக இருந்த விஜய் ஆண்டனி தன் நிலைமையை கூறி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இதனால் விஜய் ஆண்டனி இல்லாமலே மணிரத்னம் குழு படப்பிடிப்புக்கு சென்றது. நல்ல வாய்ப்பை இழந்த வருத்தத்தில் இன்னமும் இருக்கிறார் விஜய் ஆண்டனி.
0 comments:
Post a Comment