ஏ.ஆர்.முருகதாஸ் தனது சொந்த பேனரில் தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த அஞ்சலி, இப்போது அவரது தம்பி சரவணன் நடிக்கும் வத்திக்குச்சி படத்திலும் நடித்து வருகிறார்.
முருகதாசின் தம்பி புதுமுக நடிகர் என்றபோதும், தனக்கு எங்கேயும் எப்போதும் படத்தில் நல்ல வேடம் கொடுத்த நன்றிக்கடனுக்காக நடிக்க சம்மதித்துள்ளார் அஞ்சலி.
அதுமட்டுமின்றி அடுத்து ஆர்யா-ஜெய்யை நாயகர்களாக வைத்து தான் தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க வைப்பதாக அஞ்சலிக்கு வாக்குறுதி அளித்திருந்தாராம்.
ஆனால் அப்படத்திற்கான வேலைகள் நடைபெற்றது, அஞ்சலியைதான் நாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஜெய் பிடிவாதமாக சொன்னபோதும், ஆர்யா தலையிட்டு, நயன்தாராவைதான் நடிக்க வைக்க வேண்டும் என்று ஒத்தக்காலில் நின்றாராம்.
இல்லையேல் என் கால்சீட் கிடைக்காது என்றும் மறைமுகமாக மிரட்டல் விடுத்தாராம்.
இதனால் குழம்பிப்போன முருகதாஸ், அஞ்சலியை ஓரங்கட்டிவிட்டு நயன்தாரா பக்கம் திரும்பியிருக்கிறார்.
இப்போது ராஜா ராணி என்று அப்படத்துக்கு பெயர் வைக்கப்பட்டு படப்பிடிப்பையும் தொடங்கி விட்டனர்.
இந்த சேதியறிந்து, எனக்கு வர வேண்டிய வாய்ப்பை ஆர்யா மூலம் தட்டிப்பறித்து விட்ட நயன்தாராவுக்கு சரியான பாடம் புகட்டுவேன் என்று ஆவேசமாக பேசிக்கொண்டிருக்கிறாராம் அஞ்சலி.
0 comments:
Post a Comment