நடிகர் கமல்ஹாசன் திப்பு சுல்தான் வேடத்தில் நடிப்பதாக இருந்த வாய்ப்பு இப்போது ஆர்யாவுக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திப்பு சுல்தானின் வாழ்க்கையை மையமாக வைத்து மலையாள டைரக்டர் வயலார் மாதவன்குட்டி என்பவர் திப்புவும் உன்னிஅர்சையும் என்ற பெயரில் ஒரு படம் இயக்க இருக்கிறார்.
இப்படத்தை பழசிராஜா தயாரிப்பாளர் கோகுல் கோபாலன் தயாரிக்கிறார்.
முன்னதாக இப்படத்தில் திப்பு சுல்தானாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கமலுக்கு பதில் ஆர்யா அந்த ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படத்தின் நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்றும் தெரிகிறது.
இதுகுறித்து இப்படத்தை இயக்க இருக்கும் வயலார் மாதவன்குட்டி கூறுகையில், இந்தபடத்தின் கதை ஆர்யாவுக்கு ரொம்ப பிடித்து போய் உள்ளது.
இதுகுறித்து அவரிடம் பேசி வருகிறோம். மேலும் படத்தில் நாயகியாக உன்னிஅர்சா ரோலில் நடிக்க இந்தியாவில் உள்ள டாப்-5 நடிகைகளை பரிசீலனை செய்தோம்.
அதில் அனுஷ்கா தான் இந்த ரோல்க்கு சரியாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளோம்.
விரைவில் எல்லாம் முடிவானதுடம் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றார்.
0 comments:
Post a Comment