இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் திரைப்படம் சிக்கலில் இருப்பதாக அரசல்புரசலாக பேசப்படுகிறது. நீதானே பொன்வசந்தம் என்ற திரைப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என எடுக்க திட்டமிட்டு தமிழில் கிட்டத்தட்ட படத்தை முடித்து விட்டார் கவுதம் வாசுதேவ் மேனன்.
சிக்கல் என்னவோ தெலுங்கு மற்றும் இந்தி வெர்சனில் தான் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.
முதலில் தெலுங்கு நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் ராம் நடிப்பதாக இருந்தது. அவர் திடீர் என்று ஜகா வாங்கிவிட நானி ஹீரோவாகிவிட்டார்.
தெலுங்கில் இப்படி என்றால் இந்தியில் இன்னமும் சிக்கலாம்!?
சமீபத்தில் இந்தியில் வெளியான ஏக் தீவானா தா ( வின்னைத் தாண்டி வருவாயா ) ரீமேக் சொதப்பியது எப்படி என்பது இன்னமும் விளக்கப்படாத கதையாகவே இருக்க, இந்தியில் நீ தானே என் பொன் வசந்தத்திற்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் அப்படி ஒரு வரவேற்பு இல்லையாம்.
மேலும் ஹீரோவாக குஜாரிஸ் ஆகிய திரைப்படங்களில் சப்போர்டிங் ஆக்டராக நடித்த ஆதித்திய ராய் சோப்ராவை கவுதம் புரபோஸ் செய்ததும் அவ்வளவாக பிடிக்கவில்லையாம் பல தயாரிப்பாளர்களுக்கு.
இப்படி பல்வேறு செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. எது உண்மை என்பது கவுதம் மேனனுக்கே வெளிச்சம்!?
0 comments:
Post a Comment