"இசை" எனும் பெயரில் இயக்குநர் கம் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இசையமைத்து நடித்து, இயக்கி, தயாரித்து வரும் புதிய படத்தின் கதை, வளரும் இசையமைப்பாளரைப்பார்த்து வளர்ந்த பழுத்த இசையமைப்பாளர் பொறாமை கொண்டு செய்யும் டார்ச்சர்கள் தானாம்!
இந்த கதையை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெருக்கமான எஸ்.ஜே.சூர்யா கையில் எடுக்க காரணம்? ஒரே கல்லில் இரண்டு மாங்காய் எனும் பழமொழிக்கு ஏற்ப பழிவாங்கும் படலமாகத்தானாம்.!
அதாகப்பட்டது, இவரது "அ.ஆ." படத்திற்கு இசையமைத்தபோது ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா சொன்ன கேட்ட ட்யூன்களை எல்லாம் பார்த்துவிட்டு நீங்களே இசையமைப்பாளர் ஆகிவிடுங்களேன்... என கிண்டலடித்ததை தனக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும், அதேநேரம் இசைப்புயலையும் வம்பில் சிக்க வைக்க வேண்டும் என யோசி்த்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை அறிவை பார்த்து என்னையே இசையமைக்க சொன்னதால் தான் நான் "இசை" படத்திற்கு இசையமைப்பாளரானேன் என பில்-டப் கொடுத்து வருவதுடன், இசைப்புயலையும் வம்பில் சிக்க வைக்கும் உத்தேசத்தில் அவர், இளையாரா உள்ளிட்டவர்களிடம் கீ-போர்டு ப்ளேயராக இருந்து இசையமைப்பாளராக உயர்ந்தபோது, உச்சத்தில் இருந்த இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் காட்டிய எதிர்ப்புகளை நட்பு அடிப்படையில் தன்னிடம் பகிர்ந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானை காட்டி கொடுக்கும் விதமாக இசை படத்தில் எக்கச்சக்க சீக்ரெட் மேட்டர்களை "கீன்" படுத்தி ரஹ்மானை பழிதீர்க்க இருக்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா!
இசை படத்தில் எஸ்.ஜே.சூர்யா வளரும் இசையமைப்பாளர். பிரகாஷ்ராஷ், அவருக்கு டார்ச்சர் தரும் வளர்ந்த இசையமைப்பாளர் என்றால் பாருங்களேன்!
0 comments:
Post a Comment