மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக், பிரபு, அமலா, நிரோஷா ஆகியோர் நடிப்பில், இளையராஜா இசையமைப்பில் 1988-ல் வெளிவந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டான படம் அக்னி நட்சத்திரம்.
படம் மட்மல்லாது இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படம் இப்போது மீண்டும் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது.
இதற்கான உரிமையை ரமேஷ் என்பவர் வாங்கியுள்ளார். இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், அக்னிநட்சத்திரம் படத்தை ரீமேக் செய்யவுள்ளேன்.
இதில் நடிப்பதற்காக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் இரு முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே தமிழ் ரீ-மேக்கில் ஆர்யா-விஷால் ஆகிய இருவரும் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இருவரும் பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்தனர். அந்தப்படத்தில் இருவரது காம்பினேஷனும் அருமையாக அமைந்தது.
மேலும் இருவரும் நல்ல நண்பர்களும் கூட, அதனால் அக்னி நட்சத்திரம் ரீ-மேக்கிற்கும் இவர்கள் காம்பினேஷன் நன்றாக இருக்கும் என்பதால் இவர்களை தேர்ந்தெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
1 comments:
தகவலுக்கு நன்றி !
Post a Comment