விக்ரம் நடிக்க இருக்கும் கரிகாலன் படத்தின் டைரக்டர் கண்ணன் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் ஒப்புக்கொண்ட படம் கரிகாலன்.
சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் விக்ரமுடன் ஜரின்கான், அஞ்சலி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகினர்.
எல்.ஐ.கண்ணன் இப்படத்திற்கான டைரக்ஷ்ன் பொறுப்பை ஏற்று இருந்தார். படம் தொடங்கிய சிறிது காலத்திலேயே படத்தின் தலைப்பும், கதையும் என்னுடையது என்று ராஜசேகரன் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்படவே விக்ரம் தாண்டவம், டேவிட், ஐ என்று அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவிட்டார்.
இந்நிலையில் படத்திற்கு சிக்கல் எல்லாம் தீர்ந்து துவங்க இருந்த நிலையில், இப்போது டைரக்டரை மாற்றிவிட்டார்களாம்.
கண்ணனுக்கு பதிலாக ஏற்கனவே படத்திற்கு கதை, வசனம் எழுதி வரும் காந்தி கிருஷ்ணாவே படத்திற்கான டைரக்ஷ்ன் பொறுப்பையும் ஏற்று இருப்பதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment