துப்பாக்கி படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்க்கு காலில் அடிப்பட்டது. நண்பன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் புதியபடம் துப்பாக்கி.
இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை மும்பையை மையப்படுத்தி இருப்பதால் படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங்கை மும்பையிலேயே நடத்தி வந்தார் முருகதாஸ்.
தற்போது சில காட்சிகளை படமாக்க லண்டன் சென்றுள்ளனர் விஜய், முருகதாஸ் உள்ளிட்ட துப்பாக்கி படக்குழுவினர்.
லண்டனில், ஆக்ஷ்ன் காட்சி ஒன்றை படமாக்கி கொண்டிருந்தனர். அதில் விஜய் பங்கேற்று நடித்து வந்தார்.
அப்போது சண்டைக்காட்சியின் போது விஜய்க்கு கால்மூட்டில் எதிர்பாரா விதமாக அடிபட்டது. இதனையடுத்து வலியால் துடித்த விஜய் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. லண்டனில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு மெல்போர்ன் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் விஜய் பங்கேற்க இருந்தார்.
ஆனால் இப்போது அவருக்கு அடிப்பட்டதால், இந்த விழாவில் விஜய் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.
0 comments:
Post a Comment