நடிகை மீரா ஜாஸ்மின், அவரது காதலரும், இசைக்கலைஞருமான ராஜேசும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். விஜய், அஜித், விஷால், மாதவன் உள்ளிட்ட தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்த மீரா ஜாஸ்மினுக்கு தற்போது தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லையென்றாலும் மலையாளம் உள்ளிட்ட பிற மொழிபடங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கும் பிரபல மண்டோலின் இசை கலைஞர் ராஜேசும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.
சமீபத்தில் இருவரும் ரகசிய திருமணம் கூட செய்து கொண்டதாக கிசுகிசு பரவியது. ஆனால் இதனை இருவருமே மறுத்துள்ளனர்.
மேலும் மீரா ஜாஸ்மின் நடிக்கும் படங்களின் சூட்டிங் ஸ்பாட்டில் ராஜேஷை காணமுடிகிறது. அதேபோல் ராஜேஸின் இசைகச்சேரிகளிலும் மீராவை காணமுடிகிறது.
இந்நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக இருப்பதாகவும், விரைவில் இந்தப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment