தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட்டிலும் கால் பதித்து அங்கேயும் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தார்.
தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். திருமணம், குழந்தை என்று ஆன பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்ட ஸ்ரீதேவி இப்போது 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு இங்கிலீஸ் விங்கிலீஸ் என்று பெயர் வைத்துள்ளனர். டைரக்டர் பால்கி இப்படத்தை தயாரிக்க, கவுரி ஷிண்டே இப்படத்தை இயக்குகிறார்.
படத்தின் கதைப்படி நடிகை ஸ்ரீதேவி சந்தர்ப்ப சூழ்நிலையால் அமெரிக்கா செல்ல அங்கு மொழி பிரச்னையால், ஆங்கில மொழியை திக்கி திணறி பேசி அங்குள்ளவர்களால் கிண்டல்களுக்கு ஆளாகிறார்.
பின்னர் அதை சவாலாக ஏற்று முறைப்படி ஆங்கிலத்தை பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார்.
ஆங்கில மொழியை திக்கி திணறி பேசும் காட்சிகளில் அப்படியே அச்சு அசாலாக நடித்து உள்ளாராம் ஸ்ரீதேவி. தற்போது படத்தின் ஷூட்டிங் வேகமாக வளர்ந்து வருகிறது.
முதற்கட்டமாக இப்படத்தின் சில ஸ்டில்கள் வெளியாகி உள்ளன. படப்பிடிப்பை வேகமாக முடித்து செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர் படக்குழுவினர்.
0 comments:
Post a Comment