துப்பாக்கி படத்தில் விஜய் புகைபிடிக்கும் காட்சியை நீக்கிவிட்டதாக அப்படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்து இருக்கிறார். நண்பன் படத்திற்கு அடுத்து விஜய் நடித்து வரும் படம் துப்பாக்கி.
இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மே 1ம் தேதி இப்படத்தின் டிஸ்லகள் வெளியானது. அதில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற ஸ்டில்கள் வெளியாகின. இதற்கு பசுமை தாயகம் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதுடன், படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவும் பசுமை தாயகம் இயக்கத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் அக்காட்சியை நீக்கிவிட்டதாக முருகதாஸ் அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, படத்தின் விளம்பரத்திற்காக மட்டுமே விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் கிடையாது.
ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் அந்தக்காட்சி இருக்கும். இப்போது அதையும் நீக்கிவிட்டோம். இனி படத்தின் விளம்பரங்களிலும் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறாது என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸின் இந்த அறிவிப்பால் துப்பாக்கி படத்திற்கு இருந்து வந்த புகை பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
0 comments:
Post a Comment