பில்லா-2 படத்திற்கு பிறகு அஜித் நடிக்க இருக்கும் படங்கள் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை அஜித்தே தெரிவித்து இருக்கிறார். நடிகர் அஜித் இப்போது பில்லா-2 படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
தற்போது அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்தப்படம் குறித்து அஜித் கூறியுள்ளதாவது, பில்லா படத்திற்கு பிறகு அடுத்து விஷ்ணுவர்தன் டைரக்ஷ்னில் நடிக்கிறேன்.
இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இப்படத்தில் என்னுடன் நடிகர் ஆர்யாவும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.
படத்தில் நான் என் வயதுக்கு ஏற்ற கேரக்டரில் நடிக்கிறேன். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் உள்ளோம்.
ஏற்கனவே விஷ்ணுவர்தன் உடன் பில்லா படத்தில் பணியாற்றி இருப்பதால் அவருடைய டைரக்ஷ்னில் மீண்டும் நடிக்க ஆர்வமாய் உள்ளேன்.
விஷ்ணுவர்தன் படத்திற்கு அடுத்து விஜயா பிலிம்ஸ் தயாரிப்பில், சிறுத்தை பட புகழ் சிவா டைரக்ஷ்னில் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய பில்லா-2 படம் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்றும், எனது ரசிகர்களை போல நானும் என்னுடை படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கிறேன் என்றார்.
0 comments:
Post a Comment