ஹாலிவுட் தொழில்நுட்பத்துடன், கமல்ஹாசன் பிரமாண்டமாக தயாரிக்கும் விஸ்வரூபம் படத்தில் இடம்பெறும் பாடல் வரிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கதாநாயகனின் வீரத்தை மையப்படுத்தி படத்துக்கான தலைப்பு பாடல் எழுதப்பட்டுள்ளது. வைரமுத்து எழுதிய சுமார் 50 வரிகளில் இருந்து கமல்ஹாசன் தனக்குத் தேவையான வரிகளை படத்தில் பயன்படுத்தியுள்ளார். அதன் வரிகள் இதோ...
எவன் என்று நினைத்தாய்
எதைக்கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்
நெருப்புக்குப் பிறந்தான்
நித்தம் நித்தம் வளர்ந்தான்
வேளை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம்
யாரென்று புரிகிறதா-இவன்
தீயென்று தெரிகிறதா
தடைகளை வென்று வென்று
சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா?
யாருக்கும் அடிமையில்லை-இவன்
யாருக்கும் அரசனில்லை
காடுகள் தாண்டிக் கடக்கின்ற பொழுதும்
காற்றுக்கு காயமில்லை...
இந்த வரிகள்தான் விஸ்வரூபம் படத்தில் பலமுறை ஒலிக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment