கோடை விடுமுறையில் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் இல்லை

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிக்கை காலங்களை விட கோடை காலம்தான் தமிழ் சினிமாவுக்கு மிக முக்கிய சீசன் காலமாகும். இதனால் கோடையை குறி வைத்து முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகும்.

இந்த ஆண்டு கோடை ரிலீஸில் முக்கியப் படமாக எதிர்ப்பார்க்கப்பட்டது கமல் நடிக்கும் விஸ்வரூபம். ரூ 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

ஆனால் தியேட்டர் ரிலீஸ் இன்னும் தள்ளிப் போகிறது.

படத்தின் விளம்பரம், வர்த்தகம் தொடர்பான வேலைகளை இனிமேல்தான் கமல் துவங்கவிருப்பதால், படம் வெளியாவது தாமதமாகிறது.

இதே போல் அஜித்தின் பில்லா 2. இம்மாதம் வெளியாகவிருந்த இந்தப் படம், பெப்சி தொழிலாளர் பிரச்சினை காரணமாக, ஜூன் அல்லது ஜூலைக்கு தள்ளிப் போயுள்ளது.

கார்த்தி நடிக்கும் சகுனி ஏப்ரலில் வரவிருந்தது. இந்த மாதம் வெளியாகிவிடும் எனத் தெரிகிறது.

இது ஒரு புறம் இருக்க பெரிய படங்கள் வராதது, வழக்கு எண் 18/9 போன்ற சிறிய, ஆனால் நல்ல படங்கள் பக்கம் ரசிகர்களை அதிகம் போக வைத்துள்ளது.

அந்த வகையில் இந்த தாமதத்திலும் ஒரு நல்லது நடந்துள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...