நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு நடித்த காஜல் அகர்வால், இப்போது மீண்டும் அவருடன் இணைந்து இன்னொரு படத்தில் நடிக்கவுள்ளார். சகுனி படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, அடுத்து சுராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு அடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இப்படத்திற்கு ஆளின்னால் அழகு ராஜா என்று பெயர் வைத்துள்ளனர்.
தற்போது இப்படத்திற்கான கதையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார் ராஜேஷ்.
இந்நிலையில் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து டைரக்டர் ராஜேஷ் கூறுகையில், எனது முந்தைய படங்களை போன்று இந்தபடமும் காமெடி படமாக இருக்கும்.
தற்போது இப்படத்திற்கான கதை வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். இன்னும் ஹீரோயின் யார் என்று முடிவுசெய்யவில்லை. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, காஜல் அகர்வாலை நடிக்க வைக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே அவர் கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டும் அல்ல அவருக்கு இயல்பாகவே காமெடி நன்றாக வரும் எனவே அவரை நடிக்க வைக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
படத்தின் கதை வேலைகள் முடிந்தவுடன் இதுப்பற்றி காஜலிடம் பேசவுள்ளேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment