வெங்கட்பிரபு, கார்த்தியை வைத்து இயக்கும் படத்திற்கு பிரியாணி என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் டைரக்டர் வெங்கட்பிரபு.
படம் மட்டுமல்ல படத்திற்கான தலைப்பு மற்றும் தலைப்புடன் சேர்ந்து வரும் அடைமொழியையும் ரொம்ப வித்தியாசமாக வைப்பவர் வெங்கட்பிரபு.
தன்னுடைய முந்தைய படங்களான கோவா (ஏ வெங்கட்பிரபு ஹாலிடே), மங்காத்தா (ஏ வெங்கட்பிரபு கேம்) என்று தலைப்பு வைத்தவர் அடுத்து கார்த்தியுடன் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறார். இப்படத்திற்கும் வித்தியாசமாக தலைப்பு வைத்திருக்கிறாராம்.
படத்திற்கு பிரியாணி என்றும் அதன் கீழ் (ஏ வெங்கட்பிரபு டயட்) என்றும் பெயர் வைத்திருக்கிறாராம். தற்போது கார்த்தி சகுனி படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்தபடத்தை முடித்து பிறகு வெங்கட்பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தையும் ஞானவேல் ராஜாவே தயாரிக்க இருக்கிறார்.
வெங்கட்பிரபுவின் பிரியாணி கார்த்திக்கு ஜீரணிக்குமா...?
0 comments:
Post a Comment