பிரியாணியின் கதை இதுதான்கார்த்திக், ஹன்சிகா, பிரேம்ஜி நடித்துள்ள பிரியாணி வருகிற 20ந் தேதி ரிலீசாகிறது. வெங்கட்பிரபு இயக்கி உள்ளார். பிரியாணி நான் வெஜ் அயிட்டம் என்பதால் தணிக்கை குழு விடாப்பிடியாக யு கொடுக்க மறுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் யு/ஏ வுடன் படம் ரிலீசாகிறது.


எப்போதும் ஒரு சிரிப்பு, தலைசாய்ந்து நடக்கும் நடை, கிண்டல் பேச்சு போன்ற கார்த்திக்கின் கிளிசேக் மேனரிசம் இந்தப் படத்தில் இருக்காது. அவர் இதில் ஸ்டைலான பிளேபாய் கேரக்டர் செய்திருக்கிறார். 

அவர் கேரக்டரின் பெயர் சுகன். நான்காவது வகுப்பிலிருந்தே உடன் இருக்கும் நண்பனாக பிரேம்ஜி. அவரது பெயர் பரசு, கார்த்தியின் கேர்ள்பிரண்ட் பிரியங்காவாக ஹன்சிகா. படத்துக்காக ஹன்சிகா 8 கிலோ எடை குறைத்து ஸ்லிம்மாக நடித்திருக்கிறார்.மூன்று பேரும் ஒரே ஆபீசில் வேலை செய்கிறார்கள். வீக் எண்ட்டில் பப்பு, பார்ட்டி என்று அலைவர்கள் (வெங்கட்பிரபு படத்தில் அது இல்லாமலா). கார்த்திக்கிற்கு ஒரு கெட்ட பழக்கம். 

பார்ட்டியில் தண்ணி அடித்துவிட்டால் வயிறு முட்ட பிரியாணி சாப்பிட வேண்டும். ஒரு சனிக்கிழமை ஒரு பார்ட்டிக்கு போகிறார்கள். அங்கு பிரியாணி இல்லை. 

அதனால் எப்படியாவது பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கார்த்தியும், பிரேம்ஜியும் காரை எடுத்துக்கொண்டு ஆம்பூர், அல்லது வாணியம்பாடியில் பிரியாணி சாப்பிட்டு வரலாம் என்று கிளம்புகிறார்கள்.போன இடத்துல பிரேம்ஜி ஒரு பிரச்னையை இழுத்துவிட சின்ன பிரச்னை பெரும் பிரச்னையாகி இவர்களது உயிருக்கே ஆபத்தாக முடிகிற நிலைமை வருகிறது. 

அதிலிருந்து இவர்கள் எப்படி எஸ்கேப் ஆகி வருகிறார்கள் என்பதுதான் கதை. அந்த பிரச்னையை சொல்லிவிட்டால் படம் பார்க்குபோது இண்ட்ரஸ்ட் குறையலாம். சாரி....!!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...