சமீபகாலமாக இந்தி சினிமா, வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கும் தங்களது எல்லையை விரிவுபடுத்தத் தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக, ராஒன், சென்னை எக்ஸ்பிரஸ் படங்களில் ஷாருக்கானின் தென்னிந்தியாவில் விசிட் அடித்து வசூலை வாரிக்குவித்ததையடுத்து, இப்போது பாலிவுட் சினிமாவில் இன்னொரு முக்கிய நடிகரான அமீர்கானும் தென்னிந்தியா பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார்.
அந்த வகையில், இந்தியில் தான் நடித்த தூம்-3 படத்தை தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டார்.
இந்தியாவில் மட்டும் 4000 தியேட்டர்களில் வெளியான அப்படம் ஒரே நாளில் 36 கோடி வசூலித்து இதற்கு முந்தைய சாதனைகளை முறியடித்து விட்டது. குறிப்பாக தென்னகத்தில் மட்டும் 2.80 கோடி வசூலித்துள்ளதாம்.
இது இதற்கு முன்பு எந்த இந்தி படமும் வசூலிக்காத சாதனையாம். அதனால் இந்தி பட நிறுவனங்களுக்கு இப்போது தென்னிந்திய ரசிகர்கள் மீதான நம்பிக்கை அதிகரித்து விட்டதாம.
அதனால் மேலும் சில முன்னணி ஹீரோக்களின் படங்களும் மொழிமாற்றம் செய்யப்பட்டு தென்னிந்தியாவில் அடுத்தடுத்து ரிலீசாக தயாராகிக்கொண்டிருக்கிறதாம்.
இதனால் கோலிவுட், டோலிவுட் ஹீரோக்கள் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதிலும், சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் என்றென்றும் புன்னகை, பிரியாணி படங்களின் வரவினால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகாமல் தொடர்ந்து தூம்-3 ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருப்பது இங்குள்ள ஹீராக்கள் வயிற்றில் புளியை கரைத்து விட்டுள்ளது.
0 comments:
Post a Comment