மூன்றெழுத்து படத்துக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு இனிமேல் எந்த பிரச்னையும் வேண்டாம் என்றுதான் உஷாராக செயல்பட்டு வருகிறார் தளபதி நடிகர்.
அதனால்தான் அடுத்து வெளியாகும் தனது மூன்றெழுத்து படம் சம்பந்தப்பட்ட விழாக்களைகூட சத்தமில்லாமல் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் சில நலிவுற்ற தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நிகழ்ச்சியைகூட ஆர்ப்பாட்டமில்லாமல்தான் நடத்தினார்.
ஆனால், அந்த விழாவில் பேசிய சிலர், புரட்சித்தலைவரும் இப்படித்தான் செய்தார் என்று அவருடன் ஒப்பிட்டு தளபதியை பேச, செம காண்டாகியிருக்கிறார்களாம் கட்சியின் அடிபொடிகள்.
யாரை யாருடன் ஒப்பிட்டு பேசுவது. இப்படி என்னைப்பற்றி பேசுங்கள் என்று அந்த நடிகர் சொல்லிக்கொடுத்ததைதான் மேடையில் பேசியிருக்கிறார்கள் என்று அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார்களாம்.
இதனால் சத்தமில்லாமல் செய்த காரியமும் இப்படி சலசலப்பை ஏற்படுத்தி விட்டதே என்று பெரும் தலைவலியில் இருக்கும் நடிகர், இதையே காரணம் காட்டி படம் தியேட்டருக்கு வரும்போது அடுத்த அதிரடியை தொடங்கி விடுவார்களோ என்று அச்சத்தில் இருக்கிறாராம்.
0 comments:
Post a Comment