தனது பாடலை சச்சினுக்கு அர்ப்பணித்த நடிகர் தனுஷ்



இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் தெண்டுல்கர் திரையுலக நட்சத்திரங்கள் பங்குபெறும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் (சிசிஎல்) நான்காம் சீசனை கடந்த வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.

மும்பையின் புறநகர்ப்பகுதியின் உள்ள கிரான்ட் ஹயாத் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அவர் தனது மனைவியுடன் வந்திருந்தார். 

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மராத்தி, போஜ்புரி, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் இருந்து ஏராளமான திரையுலக நட்சத்திரங்களும் வந்திருந்தனர்.

தமிழ்த் திரையுலகிலிருந்து வந்திருந்த நடிகர் தனுஷ் சச்சினுக்காக ஒரு பாடலை சமர்ப்பித்து அவரை சிலிர்க்க வைத்தார். இதற்காக சச்சின் அவருக்கு நன்றி தெரிவித்தார். 

பிறரைக் கவரக்கூடிய வகையில் பாடல் வரிகளை எழுதும் திறமை கொண்ட நடிகர் தனுஷ் தனது 'ஒய் திஸ் கொலை வெறி' சூப்பர் ஹிட் பாடலுக்குப் பிறகு 'சச்சின் கீதம்' என்ற தலைப்பில் ஒரு மியூசிக் வீடியோவும் செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ், சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், போஜ்புரி டபாங்ஸ் மற்றும் வீர் மராத்தி ஆகிய எட்டு குழுவினர் இந்தப் போட்டியில் பங்கு பெறுகின்றனர். மும்பை ஹீரோசின் கேப்டனான சுனில் ஷெட்டி நாங்கள் அனைவரும் விளையாட்டு வீரர்கள் அல்ல.

இந்தப் போட்டியை அனுபவிக்கவே இங்கு வந்துள்ளோம் என்றார். இவர் தவிர ஜெனிலியா, ரிதேஷ் தேஷ்முக் மற்றும் போனிகபூர் போன்றோர் வந்திருந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...