லட்சுமி மேனனுக்கு திடீர் தண்டனை

கும்கியில் அறிமுகமாகி இப்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார் லட்சுமி மேனன். நடிக்கிற படமெல்லாம் ஹிட்டாகி ஆசீர்வதிக்கப்பட்ட நடிகையாக வலம் வருகிறார். 

ஆனால் சொந்த மாநிலமான கேரளாவில் அவரை ஒரு நடிகையாகவே பார்க்கவில்லை. இதனை நொந்து போய் கூறியுள்ளார் லட்சுமி. 


அவர் கூறியிருப்பதாவது: நான் இப்போது பிளஸ் ஒண்ணில் காமர்ஸ் படித்து வருகிறேன். என் மாநிலத்தில் என்னை ஒரு நடிகையாகவே ஏற்கவில்லை. 

குறிப்பாக நான் படிக்கும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவிகள் என்னை நடிகை என்று ஏற்றுக்கொள்ளவே மறுக்கிறார்கள். 

சமீபத்தில் பள்ளிக்கு சென்றபோது சரியாக படிக்கவில்லை என்று பள்ளிக்கு வெளியே நிற்க வைத்து தண்டனை கொடுத்தார்கள். 

அதை அனுபவித்தேன். நான் எப்போதுமே தேர்வை ஒட்டித்தான் படிப்பேன். என் அம்மா டீச்சர் என்பதால் படிப்புக்கு உதவுகிறார். 

நிறைய படங்கள் வருவதால் படிப்புக்கு இடைவெளி விட்டுவிடலாமா என்றும் யோசிக்கிறேன்" என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் லட்சுமி மேனன்.



"நாட்டுக்கு ராணியாக இருந்தாலும் வீட்டுக்கு மனைவிதானே" என்ற பழமொழி உண்டு. அதுமாதிரி நாட்டுக்கு நடிகையாக இருந்தாலும் பள்ளிக்கு அவர் மாணவிதானே.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...