அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி காதல் தீ பத்திக்கிச்சு

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி வீரர், விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் காதல் என, நீண்ட நாட்களாகவே வதந்தி பரவி வந்தது. 

ஆனால், இருவருமே இதுகுறித்து மூச்சு விடவில்லை. இந்நிலையில், இவர்கள் இருவரும், சமீபத்தில் ஒன்றாக வலம் வந்ததை, பாலிவுட்டை சேர்ந்த பலரும் பார்த்துள்ளனர். 

ஒரு ஷாம்பூ நிறுவனத்தின் விளம்பரத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே, காதல் தீ, தக தகவென பற்றிக் கொண்டதாம். 

இதையடுத்து, விராட் கோலி, மும்பை வரும்போதெல்லாம், அனுஷ்காவை சந்திக்க தவறுவது இல்லை. 


சமீபத்தில், கிரிக்கெட் விளையாடுவதற்காக, தென் ஆப்ரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன், மும்பை, வெர்சோவா பகுதியில் உள்ள, அனுஷ்கா ர்மாவின் வீட்டுக்கு வந்து, நீண்ட நேரம், அவருடன் பேசி விட்டு சென்றாராம் கோலி. 

இந்த சந்திப்பின்போது, கோலி, ஜீன்ஸ் பேண்டும், டி-ஷர்ட்டும் அணிந்திருந்ததாகவும், அனுஷ்கா, வெள்ளை நிற டி-ஷர்ட்டும், இளம் சிவப்பு நிற டிராயரும் அணிந்திருந்ததாகவும், ஆதாரப்பூர்வமாக கூறுகின்றன, பாலிவுட் வட்டாரங்கள். 

எது எப்படி இருந்தாலும், அனுஷ்காவை சந்தித்த உற்சாகத்தில், கோலி, சிக்சர் சிக்சராக வெளுத்துக் கட்டுவார் என, நம்பிக்கையுடன் இருக்கின்றனர், கிரிக்கெட் ரசிகர்கள். 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...