பிப்ரவரி 3-ல் கொலவெறி 3 ரிலீஸ்

உலகமெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் கொலவெறி பாடல் இடம்பெற்ற 3 திரைப்படம் பிப்ரவரி 3ம் தேதி முதல் ரிலீசாக உள்ளது. தனுஷ் நடிப்பில் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் முதல்படம் 3.

இப்படத்தில் தனுஷ் ஜோடியாக கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். 3 படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்த போதே, அப்படத்தில் இருந்து கொலவெறி எனும் பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்டது.

புதுமுகம் அனிருத் இசையமைப்பில் வெளிவந்த இப்பாடலை தனுஷே எழுதி, பாடியிருந்தார்.

இப்பாட்டு வெளியான முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பார்த்தும், கேட்டும் உள்ளனர்.

குழந்தை முதல் பெரியவர் வரை பலரையும் கவர்ந்த இந்தபாடல் தனுஷையும், இசையமைப்பாளர் அனிருத்தையும் உலகம் முழுக்க பிரபலமாக்கியது. தனுஷூக்கு பிரதமர் விருந்தில் பங்கேற்கும் அளவுக்கு கவுரம் கிடைத்தது இந்த கொலவெறி பாடல் மூலம்.

இந்நிலையில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள 3 படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி முத‌ல் உலகமெங்கும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதுமட்டுமின்றி கொலவெறி பாட்டுக்காகவே இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிகளவிலான தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மேலும் இப்படத்தை மும்பையை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று வெளியிட போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே கொலவெறி பாடல் ஹிட்டான சந்தோஷத்தில், படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் விருந்து கொடுத்துள்ளனர் தனுஷூம் அவரது மனைவி ஐஸ்வர்யாவும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...