தமிழில் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படம் இந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் கமல் வேடத்தில் நடிக்க சல்மான் மற்றும் ஷாரூக் இடையே போட்டி நடக்கிறதாம்.
சமீபகாலமாக பாலிவுட் நட்சத்திரங்களின் பார்வை, கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கோலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பல படங்கள் பாலிவுட்டிலும் ரீ-மேக் செய்யப்பட்டு வசூலை வாரி குவிப்பது தான்.
அந்தவகையில் சல்மான் கான் நடித்த பாடிகார்ட் படம் (தமிழில் வெளியான காவலன்) முதல்நாளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.21 கோடி வசூலாகி சாதனை படைத்திருக்கிறது.
இதுதான் இந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிக வசூலை குவித்த படமாகும். இதனால் மற்ற பாலிவுட் நடிகர்களுக்கும் தமி்ழ் படங்கள் மீது அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கமல், ஜோதிகா, கமலின் முகர்ஜி, பிரகாஷ்ராஜ் ஆகியோரது நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வேட்டையாடு விளையாடு படத்தை இந்தியிலும் ரீ-மேக் செய்ய இருக்கிறார் கவுதம்.
இதில் கமல் வேடத்தில் நடிக்க சல்மான் கான் மற்றும் ஷாரூக்கான் பெயர் அடிபடுகிறது. இருவருமே இந்தபடத்தில் நடிக்க ரொம் ஆர்வமாய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம் கவுதம் மனதில் யார் இருக்கிறார்களோ அவர்கள் இந்தபடத்தில் நடிப்பார்கள். இதனால் கமலின் வேடம் யாருக்கு என்பதை பொறுத்திருந்து தான் பார்க் வேண்டும்.
0 comments:
Post a Comment