ஒரு வருடம், இரண்டு வருடம் என்று ஒரு படத்தை எடுத்து வரும் இந்தக்கால இயக்குநர்களுக்கு மத்தியில், வெறும் 25 நாளில் ஒரு படத்தை எடுத்துள்ளனர். அந்த படத்தின் பெயர் கொண்டான் கொடுத்தான்.
ஐயப்பா ஆர்ட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், டைரக்டர் வீ.சேகரின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராஜேந்திரன் என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படத்தின் நாயகனாக வெளுத்துக்கட்டு கதிரும், நாயகியாக அத்வைதாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இளவரசு, சுலோக்ஷ்னா, ராஜ்கபூர், மீரா கிருஷ்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர் வீ.சேகர் போலவே, ராஜேந்திரனும் குடும்ப படமாக கொண்டான் கொடுத்தான் படத்தை இயக்கியுள்ளார்.
அதுவும் வெறும் 25நாட்களில். இது எப்படி சாத்தியம் என்று ராஜேந்திரனிடம் கேட்டால், சரியா திட்டமிட்டு எடுத்தால் 25 நாள் என்ன அதற்கும் குறைந்தா நாளில் ஒரு தரமான தமிழ்ப் படத்தை எடுக்கலாம் என்கிறார்.
முன்னதாக இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. படத்தின் ஆடியோ சி.டி.யை தயாரிப்பாளர் சங்க தலைவரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட, இசையமைப்பாளர் தேவா பெற்றுக்கொண்டார்.
பின்னர் தேவா பேசுகையில், படத்தில் மொத்தம் 5 பாடல்களும் நன்றாக வந்துள்ளன. பாடல் மட்டுமல்ல படமும் நன்றாக வந்திருக்கிறது. ரீ-ரெக்கார்டிங் செய்வதற்காக இப்படத்தை முழுவதும் பார்த்தேன்.
கிளைமாக்ஸ் காட்சியில் என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அந்த அளவிற்கு படம் என்னை பாதித்தது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் டைரக்டர் ராஜேந்திரன் என்றார்.
0 comments:
Post a Comment