கூகுள் இணைய நிறுவனம், இந்தாண்டில், தங்கள் நிறுவன இணையத்தால், அதிகம் தேடுதலுக்கு ஆளான, சர்வதேச அளவிலான பிரபலங்களை பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
கூகுள் இணையம் மூலம், இந்தியர்களால், அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், முதலிடத்தை பிடித்தவர், அன்னா ஹசாரே அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலாகத் தான் இருக்கும் என, நீங்கள் நினைத்தால், உங்களின் கணிப்பு தவறு.
"ஜிஸ்ம்-2 என்ற இந்தி படத்தில் அறிமுகமான, கனடா இறக்குமதியான, நடிகை சன்னி லியோனைத் தான், இந்திய ரசிகர்கள், கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.
இத்தனைக்கும், இவர் நடித்த, ஒரே ஒரு படம் தான், வெளியாகியுள்ளது. தற்போது, ஏக்தா கபூரின், "ராகிணி எம்.எம்.எஸ்., என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நிலைமை இப்படி இருக்க, இந்தி திரைப்பட ரசிகர்களுக்கு, லியோன் மீது, ஏன் கிறுக்கு பிடித்தது என்று தான் தெரியவில்லை.
0 comments:
Post a Comment