விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் கால்சீட் கிடைக்காத இயக்குனர்கள், அதற்கடுத்தபடியாக இரண்டாம் தட்டு ஹீரோக்களைத்தான் அணுகுவார்கள்.
அந்த பட்டியலில் இருக்கும் ஆர்யா,விஷால், ஜீவா போன்ற நடிகர்களைத்தான் நாடுவார்கள்.
அந்த வகையில், கோ படத்துக்குப்பிறகு ஜீவாவின் மீது இயக்குனர்களுக்கு ஓரளவு நம்பிக்கை பிறந்தது. அதோடு, படாதிபதிகளுக்கும் இவரை நம்பி முதலீடு செய்யலாம் என்றும் துணிச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து, சில படாதிபதிகள் தொடர்ந்து கால்சீட் கேட்டு ஜீவாவை முற்றுகையிட்டனர்.
அவரோ, கோ படத்தையடுத்து நடித்த, முகமூடி வெளியான பிறகு புதிய படங்களில் கமிட்டானால் 3 கோடியாக இருக்கும் படக்கூலியை 5 கோடி ஆக்கலாம் என்ற கணக்கில் கமிட்டாகாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ஆனால் முகமூடி பெரிய அளவில் சறுக்கிவிட, ஜீவா போட்டு வைத்திருந்த கணக்கெல்லாம் தப்பாகி விட்டது.
அவர் திரும்பிப்பார்த்தபோது, கால்சீட்டுக்காக நின்று கொண்டிருந்த அத்தனை படாதிபதிகளை தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தனர். இருப்பினும் சோர்வடையவில்லை ஜீவா, நீதானே என் பொன்வசந்தம் என்னை காப்பாற்றும் என்னை தில்லாக நின்று கொண்டிருந்தார்.
ஆனால் வழக்கம்போல் அந்த படமும் ஜீவாவுக்கு பலத்த அடியை கொடுத்திருப்பதால், இப்போது யான் படத்தில் நடித்து வரும் அவரது சம்பளம் 3 கோடியில் இருந்தும் கடகடவென இறங்கி விட்டதாம்.
அதிகம் பேசினால் படத்திலிருந்தே கடாசி விடுவார்கள் என்று, நீங்களா பாத்து ஏதோ கொடுங்கள் நடித்துவிட்டுப்போகிறேன் என்கிற அளவுக்கு பேசி வருகிறாராம் ஜீவா.
0 comments:
Post a Comment