மதுரையில் பெரிய மருத்துவமனை கட்டி சேவை மனப்பான்மையுடன் மருத்துவம் பார்ப்பவர் டாக்டர் பி.சரவணன். இவர் நடித்து நாளை(28.12.12) உலகம் முழுவதும் வெளிவர இருக்கும் படம் "அகிலன்"!
ஸ்பாட்லைட் சினி கிரியேஷன்ஸ் எனும் புதிய பேனரில் டாக்டர்.பி.சரவணனே தயாரிக்கவும் செய்திருக்கும் இப்படத்தை ஹென்றி ஜோசப் எனும் புதியவர் இயக்கி இருக்கிறார்.
"திருடா திருடி" முதல் "யோகி" வரை இயக்குனர் சுப்ரமணிய சிவாவிடம் உதவியாளராக இருந்த ஹென்றி இயக்கி இருக்கும் முதல்படம் தான் "அகிலன்".
இதுநாள் வரை வெளிவந்த போலீஸ் கதைகளில் வித்தியாசமானதாக உருவாகி இருக்கும் அகிலன் படத்தில் போலீஸ் அதிகாரி அகிலனாக நடித்திருக்கும் டாக்டர் பி.சரவணன் ஜோடியாக புதுமுகம் வித்யா நடித்திருக்கிறார்.
டாக்டர் பி.சரவணன் - விதயா ஜோடியுடன் இளம் ஜோடிகள் அம்ரித் - லீமா, கஞ்சா கருப்பு, ரவிபால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கணேஷ் ராகவேந்திரா இசையமைப்பில் "மன்மத லீலையை வென்றார் உண்டோ..." ரீ-மிக்ஸ் பாடல் படத்தின் பெரும் ஹைலைட் என்கிறார் இயக்குனர் ஹென்றி ஜோசப்!
ஆக்ஷ்ன், காதல், காமெடி, சென்டிமென்ட் என்று ஜனரஞ்சகமாக உருவாகியிருக்கும் அகிலன் படத்தின் கதை பெரும்பாலும் இரவில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டிருப்பதால் தன் மருத்துவ சேவை தொழிலுக்கு எந்தவித மாசுமின்றி இரவு நேரங்களில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு டாக்டர் பொளந்து கட்டியிருக்கிறாராம்!
நாளை(28.12.12) அதையும் பார்ப்போம்! ஆல் தி பெஸ்ட்!
0 comments:
Post a Comment