விஷாலின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய த்ரிஷா


லேட்டஸ்ட் ஹீரோயினிகளில் த்ரிஷாவின் தீவிர ரசிகராம் விஷால். அவர் நடித்த படங்களென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். 

எடுத்துக்கொள்ளும் கதாபாத்திரமாகவே மாறி விடும் த்ரிஷா ரொம்ப க்யூட் என்றும் அவரது அழகுக்கு பஞ்ச் வைக்கிறார் நடிகர். 

மேலும், த்ரிஷாவுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. அதற்காக இதற்கு முன்பு நான் நடித்த படங்களுக்கு ஹீரோயினி இன்னும் ஓ.கே ஆகவில்லை என்று டைரக்டர் சொல்லும்போதெல்லாம் த்ரிஷாவுக்கு போன் பண்ணி கேட்பேன். 

ஆனால் என் துரதிஷ்டம் அவர் அந்த நேரத்தில் வேறு வேறு படங்களில் லாக்காகியிருப்பார். அப்படி இதுவரை அவரிடம் நான்கு முறை கேட்டிருக்கிறேன்.

ஆனால் இந்த சமர் படத்திற்கான கதையே அவன் இவன் படத்தில் நடித்தபோது கேட்டநான், அப்போதே அவரிடம் இந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டுவிட்டேன். 

அவரும் இந்த முறை நாம் டூயட் பாடுவது உறுதி என்று வாக்குறுதி அளித்து இப்போது நடித்தும் கொடுத்து விட்டார். 

ஏற்கனவே பரிட்சயமான நடிகை என்பதால், மற்ற நடிகைகளுடன் நடித்ததை விட இந்த படத்தில் த்ரிஷாவுடன் ஓரளவு நெருக்கம் காட்டியே நடித்தேன். 

அதேபோல் அவரும் தயக்கம் இன்றி நெருங்கி நடித்ததால் காதல் காட்சிகள் ரொம்ப தத்ரூபமாக வந்திருக்கிறது என்று சொல்லும் விஷால், சமர் படத்தில் நடித்த பிறகுதான் த்ரிஷா ரொம்ப நல்ல நடிகை என்பதை கண்கூடாக உணர்ந்தேன் என்கிறார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...