விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்-ல் வெளியிடுகிறார் கமல்


எதிலும் புதுமைகளை படைப்பதில் கமலுக்கு நிகர் கமல் தான். ஹாலிவுட் தரத்தில் தான் உருவாக்கியுள்ள விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாக டி.டி.எச்.-ல் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார். 

இதனால் தாங்கள் பெருமளவு பாதிக்கப்டுவோம் என்று தியேட்டர் அதிர்பர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கமல் தரப்புக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் பிரச்னை உருவாகியுள்ளது.

கமல், நடித்து, இயக்கி, பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள படம் விஸ்வரூபம். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கமல் ஜோடியாக ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் நடித்துள்ளனர். 

ஆரோ 3டி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஹாலிவுட் தரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் ஜனவரி 11ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகிறது. நாளை 7ம் தேதி படத்தின் ஆடியோ ரிலீசை வைத்துள்ளார். 

இந்நிலையில், விஸ்வரூபம் ரிலீசாகும் அதேநாளில் 8 மணிநேரத்திற்கு முன்பாக டி.டி.எச். சேவை மூலம் டி.வி.யில் ஒளிபரப்பினால் திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க முடியும் என்றும், தியேட்டர்களுக்கு போகாதவர்களையும் படம் பார்க்க வைக்க முடியும் என்றும் கமல் கருதுகிறார். 

இதற்காக பிரபல டி.டி.எச். நிறுவனங்களுடன் பெரும் தொகைக்கு கமல் பேசியுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளையும் கமல் சந்தித்து பேசி அவர்களிடம் ஆதரவு கேட்டுள்ளார். 

திரையுலக சங்கத்தின் கூட்டு கூட்டத்தை கூட்டி இதுபற்றி முடிவு செய்யலாம் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். அதேசமயம் தியேட்டர் உரிமையாளர்கள் இதனை எதிர்த்துள்ளனர். 

கமலை பின்பற்றி எல்லா படங்களையும் டி.டி.எச். மூலம் ஒளிபரப்ப முடிவெடுத்தால் தியேட்டர்களுக்கு கூட்டம் வராது என அவர்கள் கூறுகின்றனர். 

இதுதொடர்பாக முக்கிய முடிவு எடுக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்பட இருக்கிறது. 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...