அமலா பாலை காப்பாற்றிய லிங்குசாமி

"வேட்டை" படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியை செம்புலி ஜெகனும், மாடல் ரம்யாவும் தொகுத்து வழங்கினர். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த "வேட்டை" பட ஹீரோயின் அமலா பாலை, மேடைக்கு வருமாறு ஜெகன் அழைத்தார். 


மேடைக்கு அமலா பால் வந்து கொண்டிருக்க... சந்தில் சிந்து பாடும் விதமாக ஜெகன் தன் வழக்கமான பாணியில் கிண்டலை அவிழ்த்து விட்டார். அமலா வரும் போது ஜெகன் " "கேரளாவில் இருந்து தண்ணி கேட்டா கொடுக்க மாட்டேங்குறாங்க, ஆனா அமலா பால் போன்ற நிறைய அழகான பொண்ணுங்கள மட்டும் அனுப்புறாங்க" அப்படின்னு கிண்டலாக சொல்ல, அதை கண்டும் காணாமல் இருந்து விட்டார் அமலா பால்.


அதோடு நிறுத்தினாரா ஜெகன் , மீண்டும் அமலாபாலை பார்த்து நாங்கள் எல்லாம் உங்களுக்கு தண்ணி கொடுத்து, டீக்கடைக்காரங்க டீ போட பால் கொடுத்து வியாபாரத்துக்கு உதவுகிறோம், ஆனால் நீங்கள் தண்ணீர் தர மாட்டேங்குறீங்க என்றார். 


அதுவரை அமைதியாகவே மேடையில் அமர்ந்திருந்த அமலா பால், நான் இந்த படத்தில் நடித்திருக்கிற செலபிரிட்டி, அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன், நீங்கள் பிரஸ் மீட்டில் கேள்வி கேட்கிற மாதிரி கேட்கிறீர்களே என்றார். 


அவருக்கு சப்போர்ட்டாக பேசிய ரம்யா : "ஜெகன் அவுங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களா இல்லையா என்றார்".  பின்னர் ஒரு வழியாக நிகழ்ச்சியும் நடந்தது.



இதனைத் தொடர்ந்து மறுநாள் காலையில் பிரஸ்மீட் நடந்தது. பிரஸ் மீட்டில் அமலாபால், சமீரா ரெட்டி, இயக்குனர் லிங்குசாமி, நடிகர்கள் மாதவன். ஆர்யா என எல்லோரும் கலந்து கொண்டனர். 


லிங்குசாமி வழக்கம் போலவே வளவளவென பேசிக்கொண்டிருக்க பிளைட்டுக்கு நேரம் ஆகி விட்டது எனக் கூறி மாதவனும், ஆர்யாவும் எஸ்கேப் ஆக மாட்டிக் கொண்டார் அமலாபால். ஒரு வழியாக லிங்கு சாமி அவரது லெக்சரை முடித்து அமர்ந்தவுடன் அமலா பாலிடம் கேள்வி கேட்க முயன்றனர் பத்திரிகையாளர்கள், 



உடனே அமலா பாலுக்கு ஆதரவாக எழுந்து நின்ற லிங்குசாமி, நீங்கள் அனைவரும் என்ன கேள்வி கேட்கப் போறீங்க என்று தெரியும், தயவு செய்து கேள்விகள் வேண்டாம் என்று தடுத்து நிறுத்தி அமலாபாலை காப்பாற்றி அனுப்பி வைத்தார். தொகுப்பாளர் ஜெகன் கேள்வி கேட்ட அளவுக்குக் கூட பத்திரிகையாளர்களுக்கு பிரஸ் மீட்டில் ஒரு நடிகையிடம் கேள்வி கேட்க முடியாமல் போனது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...