இயக்குனர்-தயாரிப்பாளர் லிங்குசாமி சமீபத்திய தன் படத்திற்கு "வேட்டை" எனப் பெயர் வைத்து விட்டு கோடம்பாக்கத்தில் பண்ணுகிற சேட்டைகள் கொஞ்ச நஞ்சம் இல்லையாம்...... லேட்டஸ்டாக லிங்கு தன் பங்கிற்கு செய்த சேட்டையில் சாம்பிளுக்கு இதோ ஒன்று...
2000 கோடி முதலீட்டில் கோலிவுட்டில் தமிழ்ப்படங்கள் தயாரித்து வரும் பெரிய நிறுவனம் ஏ.ஜி.எஸ். "மதராசப்பட்டினம்" உள்ளிட்ப எண்ணற்ற மெகா பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்துள்ளது.
இந்நிறுவனத்ததின் தயாரிப்பில், இயக்குனர் கே.எஸ்.ஆனந்த் இயக்கத்தில், 50-60 கோடி ரூபாய் செலவில் தற்போது உருவாகி வரும் படம் "மாற்றான்". இப்படத்தினை தனக்கு விற்று விடும்படி மொத்த குத்தகைக்கு பேசி இருக்கிறார் லிங்கு!
தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படம் மட்டுமல்லாது பிறரது படங்களையும் வாங்கி வினியோகம் செய்து வரும் ஏ.ஜி.எஸ்., தாங்கள் மாற்றானை மாற்றானுக்கு விற்கப்போவதாக சொல்லாமலே லிங்குசாமி பிசினஸ் பேச வந்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ள ஆவலாய் களம் இறங்கி இருக்கிறது!
அதன் ரிசல்ட் இவ்வாறாக இருந்திருக்கிறது. அதாகப்பட்டது, திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியாஸ் லிமிடட் தயாரிப்பில் தான் இப்பொழுது இயக்கி வரும் வேட்டை படத்தை யு.டி.வி.,க்கு நல்ல லாபத்திற்கு விற்று விட்டார் லிங்குசாமி.
ருசி கண்ட பூனையாகியுள்ள லிங்கு, அதே மாதிரி பிற பெரிய பட்ஜெட் படங்களையும் யு.டி.,விக்கும் தனக்கும் உள்ள அண்டர்ஸ்டாண்டிங்கில் வாங்கி விற்றால் உட்கார்ந்த இடத்தில் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கலாமே என மனக்கோட்டை கட்டியிருக்கிறார்.
இந்த நப்பாசையில் தான் மேற்படி மாற்றானை கைமாற்றி விட சொல்லி, லிங்கு ஏ.ஜி.எஸ்.,நிறுவனத்தினை கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார் என்ற ரகசியம் தெரியவந்திருக்கிறது ஏ.ஜி.எஸ்., க்கு. விஷயத்தை தெரிந்து கொண்டு விழுந்து, விழுந்து சிரித்த ஏ.ஜி.எஸ்., "ரிலீஸ் ஆக முடியாமல் எத்தனையோ படங்கள் சிக்கி தவிக்கிறது!
அவற்றின் ரிலீஸூக்கு அக்கறை காட்டாத நீங்கள் 2000 கோடி முதலீட்டில் தமிழ்படங்களை எடுக்கும் என்னைச் சீண்டுவது நல்லதல்ல..." என லிங்குசாமியை எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.
இது மாதிரி சேட்டைய விடுங்க..வேட்டை பட வேலைகளை பாருங்க லிங்கு!
0 comments:
Post a Comment