இறுதிகட்டத்தில் அஜித்தின் பில்லா 2

அஜித்தின் பில்லா பார்ட் 2 படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அஜித் நடித்த பில்லா படம், கடந்த 2007ல் ரிலீசானது. இதில் நயன்தாரா, நமீதா ஆகியோர் அஜித் ஜோடியாக நடித்ததுடன், போட்டி போட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்தனர்.

டைரக்டர் விஷ்ணுவர்த்தன் இயக்கினார். இப்படம் பழைய பில்லா படத்தின் ரீமேக் ஆகும். இதன் இரண்டாம் பாகத்தை பில்லா 2 என்ற பெயரில் படமாக்க அஜித் விரும்பினார்.

அதன்படி இயக்குனர் சக்ரிடோலட்டி இதற்கான கதையை உருவாக்கினார். இவர் கமலஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தை இயக்கியவர்.

தூத்துக்குடி கடற்கரையோரம் பிறந்து வளர்ந்து ஒருவன் சர்வதேச கடத்தல் தாதா ஆவதுபோல் கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்தது. தற்‌போது கடைசி கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது.

மொத்தம் 93 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்து பாடல் மற்றும் டிரைலர் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.

இறுதிகட்டத்தில் இருக்கும் பணிகளை முடித்ததும், ஓரிரு மாதங்களில் படம் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...