விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் நண்பன் படத்தின் ஆடியோ சி.டி.யை, பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்தியில் சூப்பர் ஹிட்டாகி, வசூலை வாரி குவித்த படம் 3 இடியட்ஸ். அமீர்கான், மாதவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் தமிழில், நண்பன் என்ற பெயரில் உருவாகியுள்ளது.
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீசை வருகிற 15ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நடிகர், நடிகைகளின் நடனம், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த விழாவுக்கு நடிகர் அமீர்கானை அழைக்க முடிவெடுத்துள்ளனர். அவரை அழைத்து வரும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டுள்ளார்.
சமீபகாலமாக தமிழ் படங்களின் ஆடியோவை, பாலிவுட் பிரபலங்களை வைத்து ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே பெப்சி விஜயன் தன்னுடைய மார்க்கண்டேயன் படத்தின் ஆடியோ ரிலீசுக்கு சல்மான் கானை அழைத்து வந்தார்.
அதேபோல் தமிழ் ரா-1 படத்தின் ஆடியோவை, படத்தின் நாயகன் ஷாரூக்கானை வைத்து ரிலீஸ் செய்தனர். அந்தவரிசையில் இப்போது நண்பன் படத்தின் ஆடியோவையும் அமீர்கானை வைத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
1 comments:
பகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
Post a Comment