அஜித் வீட்டுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

மங்காத்தா 100வது நாள் விழாவை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், நடிகர் அஜித்தின் வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். தன்னை அரசியலுக்கு அழைத்த ரசிகர்களை கடிந்து கொண்ட அஜித், ஒரு கட்டத்தில் ரசிகர் மன்றங்களையே கலைத்து விட்டார்.

இப்போது மங்காத்தா பட வெற்றியால் மீண்டும் ரசிகர்கள் தங்களது ஆவலை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் மங்காத்தா பட தயாரிப்பாளர் துரை.தயாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை எழுதியிருக்கிறார். அதில், அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை.

படத்தின் நாயகன் இல்லாமல் மங்காத்தா படத்தின் 100வது நாள் விழாவை கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை. அஜித் சார் நடித்து வெளிவந்த படங்களில் மங்காத்தா படம்தான் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது.

அப்படத்தினை எனது நிறுவனம் தயாரித்ததில் பெருமை கொள்கிறேன். தல ரசிகர்கள் அவரை மங்காத்தா படத்தின் 100வது நாள் விழாவிற்கு அழைத்து வருவதாக இருந்தால், 100வது நாள் விழாவை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ய காத்திருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்துதான் மீண்டும் அஜித்தின் வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம் ரசிகர்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...