தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக காலூன்றி 85வது படமாக ஜில்லாவை தயாரித்திருக்கிறார் ஆர்.பி.செளத்ரி. எந்தவொரு படத்தையும் அத்தனை சுலபத்தில் ஓ.கே பண்ண மாட்டார்.
அவரிடம் கதை சொல்லச்சென்றாலே டைரக்டர்களை பிழிந்து எடுத்து விடுவார். அந்த அளவுக்கு ஒரு பவர்புல்லான தயாரிப்பாளர் செளத்ரி.
அப்படிப்பட்டவர் மோகன்லால்-விஜய்யை இணைத்து தயாரித்திருக்கும் படத்திற்காக எத்தனை மெனக்கெட்டிருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா?
அதோடு இந்த படத்தில் நடித்துள்ள விஜய், தலைவா தோல்விக்குப்பிறகு நடிக்கும் படம் என்பதால் கதை விசயத்தில் அதிக கவனம் செலுத்தினார்.
அதேபோல், மோகன்லால் ஒரு படத்தில் கமிட்டாகிறார் என்றால், அந்த கதையில் வலுவில்லாமல் என்ட்ரி கொடுக்கவே மாட்டார். ஆக, பல ஜாம்பவான்களில் ஆளுமையோடு நேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ஜில்லா.
சூப்பர் குட் பிலிம்சின் பூவே உனக்காக படத்தில் நடித்த விஜய்க்கு ஜில்லா 6-வது படமாகும். மதுரை மண்வாசனையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மோகன்லாலின் வளர்ப்பு மகனாக நடித்திருக்கிறார் விஜய்.
இப்படம் செளத்ரி இதுவரை தயாரித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகியிருக்கிறது. மேலும், பொங்கலுக்கு வெளியாகும் ஜில்லாவை 1000 தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டிருப்பவர்கள், கேரளாவில் மட்டும் 300 தியேட்டர்களில் வெளியிடுகிறார்களாம்.
இப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் மோகன்லால், ஜில்லாவில் நடித்ததற்காக சம்பளமே பெற்றுக்கொள்ளாமல் கேரளா உரிமையை வாங்கியிருக்கிறார்.
மேலும் இதுவரை தனது படங்களுக்கு இல்லாத அளவுக்கு பெரிய பப்ளிசிட்டி செய்து படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் கேரளாவில் வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதால், ஜில்லா இன்னும் பெரிய அளவில் ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கிறாராம் மோகன்லால்.
0 comments:
Post a Comment