இரண்டெழுத்து நடிகரை வாரிவிடும் இயக்குனர்


ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படங்கள் தயாரித்து வரும் அந்த ஐந்தெழுத்து இயக்குனர், தயாரித்த நான்கெழுத்து படத்தில் சேட்டை நாயகனும், சுப்பிரமணியபுரம் நடிகரும் இணைந்து நடித்தனர். 

ஆனால், சேட்டை நடிகருக்கே படத்தில் முக்கியத்துவம் கொடுத்ததோடு, விளம்பரங்களிலும் அவரையே முன் நிறுத்தினர். இதனால் அப்படத்தின் இரண்டெழுத்து நாயகன் செம டென்சனாகி விட்டார். 

ஏன் நமக்கு மட்டும் இப்படி ஓரவஞ்சணை செய்கிறார்கள் என்று கோபித்துக்கொண்டு படப்பிடிப்பு நடைபெற்றபோது, அடிக்கடி டேக்கா கொடுத்து வந்தார். 

இதனால் சில நாட்களில் அவரால் படப்பிடிப்பும் பேக்கப் ஆகியிருக்கிறது. இதையடுத்து, படத்தை தயாரித்த இயக்குனருக்கும், நடிகருக்குமிடையே வாக்குவாத மோதலும் நடந்திருக்கிறது.

அதனால், இப்போதும் தான் எந்த சினிமா மேடைகளில் தோன்றினாலும் நடிகரின் ஞாபகம் வந்தால், சினிமாவில் நாம வளர்த்து விட்டவர்களே நன்றி மறந்து விடுகிறார்கள் என்று நடிகரை குறி வைத்து தாக்கிப்பேசுகிறார் இயக்குனர். 

இப்படி சிலகாலம் பேசி வந்த அவர், இப்போது யாராவது தனக்கு வேண்டப்பட்டவர்கள் அந்த நடிகரை வைத்து படம் பண்ணும் விசயம் காதுக்கு வந்தால் உடனே அவர்களுக்கு போன்போட்டு அந்த நடிகரை வைத்தா படம் பண்ணுகிறீர்கள். 

வேண்டாம், வேறு யாராவது நல்ல நடிகரை வைத்து பண்ணுங்கள் என்று கேட்டுக்கொள்கிறாராம். இதனால் நடிகருக்கு சில படங்கள்கூட கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிருக்கிறதாம்.

இதெல்லாம் இயக்குனர் செய்யும் வேலைதான் என்பதை எப்படியோ தெரிந்து கொண்ட நடிகர், எந்த படம் ஓடும், எந்த படம் ஓடாதுன்னு எப்படி யாராலும் சொல்ல முடியாதோ. 

அதே மாதிரி, இந்த சினிமாவுல யாரோட வளர்ச்சியையும், யாராலும் தடுக்க முடியாது. இவரு என்னை வெட்ட வெட்ட நான் தழைச்சிக்கிட்டேதான் இருப்பேன் என்று நெஞ்சை நிமிர்த்தி பேசி வருகிறாராம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...