குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும்படி ஒரு கதை பண்ணுங்க என்று சிறுத்தை சிவாவிடம் அஜீத் சொன்னதையடுத்து, அவர் உருவாக்கிய கதைதான் வீரம்.
காதல், செண்டிமென்ட், காமெடி என ஒரு ஜனரஞ்சகமான கதையை தயார் செய்த டைரக்டர் சிவா, சிறுத்தையைத் தொடர்ந்து தமிழில் இரண்டாவது ஹிட் கொடுத்துள்ளார்.
வீரம் படத்தில் அஜீத்துக்கு பெரிதாக ஒன்றும் பஞ்ச் டயலாக் கிடையாது. என்ன நான் சொல்றது என்பார். அந்த வார்த்தையில் பெரிதாக எதுவுமே இல்லை. என்றபோதும், அஜீத் சாதாரணமாக பேசிய அந்த டயலாக்கூட அவரது ரசிகர்களால் பஞ்ச் டயலாக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.
இதையடுத்து ஒரு காட்சியில், தனது வீட்டில் சமையல்காரராக வேலை செய்யும், அப்புக்குட்டிக்கு திருமணம் நடைபெறும்போது, மார்க்கெட்டில் உள்ள தனது கடை ஒன்றை அவர் பெயருக்கு எழுதிய பத்திரத்தை அவரிடம் கொடுப்பார் அஜீத்.
அப்போது, அனைவருமே ஆச்சர்யத்துடன் அவரை பார்க்க, ''நம்மகூட இருக்கிறவங்களை நாம பாத்துக்கிட்டா கடவுள் நம்மளை பாத்துக்கிடுவார்'' என்று ஒரு டயலாக் பேசுவார் அஜீத்.
இந்த டயலாக்கை முதலில் படத்தில் எழுதவில்லையாம் டைரக்டர் சிவா. ஒருநாள் ஸ்பாட்டில் இதை அஜீத் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தாராம்.
அப்போது இது ரொம்ப நல்லாயிருக்கு படத்தில் ஒரு காட்சியில் வைத்துக்கொள்ளட்டுமா? என்று கேட்க, ஓகே சொல்லிவிட்டாராம் அஜீத்.
அதையடுத்துதான் சரியான இடத்தில் அந்த டயலாக்கை வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்து, அப்புக்குட்டிக்கு உதவி செய்துவிட்டு பேச வேண்டிய இடத்தில் அந்த டயலாக் இணைத்து விட்டாராம் சிவா.
ஆக, இதேபோல் அஜீத்தின் நிஜ கேரக்டரின் பிரதிபலிப்பும் வீரம் படத்தில் ஆங்காங்கே பல இடங்களில் இடம்பெற்றிருக்கிறதாம்.
0 comments:
Post a Comment