மீண்டும் கோர்ட்டுக்கு டிமிக்கி கொடுத்த பிரபு - நயன் ஜோடி

காதல் மனைவி ரமலத் தொடர்ந்த வழக்கில் (கள்ளக்)காதல் ஜோடிகளான நடிகர் பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் இன்றும் கோர்ட்டில் ஆஜராகவில்லை.


தனது கணவர் பிரபுதேவாவை, நயன்தாராவிடம் இருந்து மீட்டுத் தரும்படி பிரபுதேவாவின் காதல் மனைவி ரமலத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கில் ஆஜராகும்படி முதலில் நடிகர் பிரபுதேவாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கோர்ட்டுக்கு வரவில்லை. பின்னர் ரமலத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரபுதேவாவும், நயன்தாராவும் ஒன்றாக ஜோடி சேர்ந்து பொது ‌நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தடை விதிக்கும்படி கோரப்பட்டது.


இதையடுத்து நயன்தாரா மற்றும் பிரபுதேவாவுக்கு நடிகர் சங்கம் மூலமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து இன்று (23ம்தேதி) நயன்தாராவும், பிரபுதேவாவும் கோர்ட்டில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறையும் கள்ளக்காதல் ஜோடி கோர்ட்டுக்கு டிமிக்கி கொடுத்து விட்டார்கள். வழக்கு தொடர்ந்த ரமலத்தும் இன்று கோர்ட்டுக்கு வரவில்லை.


அதேநேரம் ரமலத் சார்பில் அவரது வக்கீல் மருத்துவ சான்றிதழ் ஒன்றை கோர்ட்டில் சமர்ப்பித்தார். அதில் ரமலத்துக்கு உடல்நிலை சரியில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அ‌ன்றையதினம் பிரபுதேவாவும், நயன்தாராவும் கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...