நந்தலாலா - ஸ்பெஷல் ஹைலைட்ஸ்

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே போன்ற வெற்றி படங்களை இயக்கிய டைரக்டர் மிஷ்கின் அடுத்து நடிகராக அவதாரம் எடுத்துள்ள படம் நந்தலாலா. மிஷ்கினின் கனவுபடமான இப்படத்தை ஐயங்கரன் இண்டர்நெஷனல் தயாரித்துள்ளது.


அஞ்சாதே படத்தில் கத்தால கண்ணால குத்தாத என்ற பாடல் மூலம் பிரபலமான நடிகை ஸ்னிதா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், ரோகின மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பற்றிய ‌ஹைலைட்ஸ் வருமாறு:


* படத்தில் முக்கிய கதாபாத்திரமே 10வயது சிறுவனாக வரும் அஸ்வந்த்தானாம்.


* மிஷ்கின் இந்தபடத்தில் ஒருமனநோயாளி போல் நடித்திருக்கிறார். இதற்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் 15நாட்கள் சென்று நோயாளிகளை கவனித்து வந்திருக்கிறார்.


* நகரத்தில் தொடங்கி, கிராமத்தில் முடிய ஒரு குழந்தையும் ஒரு பெரியவரும், தங்களது தாயை தேடி போற ஒரு பயணத்தை படம் பிடித்து மக்களிடம் சமர்ப்பித்திருக்கிறார் மிஷ்கின்.


* படம்முழுக்க மிஷ்கின், ஸ்னிக்தா, அஸ்வந்த் ஆகி‌ய மூவரும் ஒரே காஸ்ட்யூமில் வருகின்றனர்.


* இளையராஜாவின் இசையில் படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள் மட்டும் அமைந்துள்ளன. இப்படத்தில் இளையராஜா, இசைக்கு ஹங்கேரி இசைக்குழுவை பயன்படுத்திருப்பது மேலும் வலு சேர்த்துள்ளது.


* படப்பிடிப்பு பெரும்பாலும் கோபிசெட்டிபாளையம், பொள்ளாச்சி, கோவையை சுற்றியே படமாக்கியுள்ளனர்.


* கிராமப்புறத்தை ஒரு அழகான கவிதையாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துச்சாமி.


* படம்முழுக்க ஒரு இசைப்பயணமாகவே பார்வையாளர்களை உட்காரவைத்திருக்குமாம் நந்தலாலா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...