விஜய் டி.வி.,யில் மன்மதன் அம்பு இசை

மன்மதன் அம்பு படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை விஜய் டி.வி. பெரும் விலைக்கு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துக்கு சொந்தமாக கலைஞர் டி.வி. உள்ளிட்ட சேனல்கள் இருக்க, மன்மதன் அம்பு நிகழ்ச்சி உரிமையை விஜய் டிவிக்குக்கு கொடுத்துள்ளது கோலிவுட்டில் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.


சிங்கப்பூர் எக்ஸ்போவில், மிகப்பெரிய சொகுசு கப்பலில் 2 தினங்கள் நடக்கும் மன்மதன் அம்பு இசை வெளியீட்டு விழாவை விஜய் டிவி ஒளிபரப்புகிறது விழாவில் கமல்ஹாஸன், த்ரிஷா, மாதவன், சங்கீதா, கேஎஸ் ரவிக்குமார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்றனர்.


நவம்பர் 20-ம் தேதி இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடக்கிறது. ஆனால் விஜய் டிவியோ, 18 மற்றும் 19-ம் தேதிகளில் இதற்கான முன்னோட்டக் காட்சிகளை ஒளிபரப்புகிறது. இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 அழைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.


7000 பார்வையாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், கமல்ஹாஸன் - தேவி ஸ்ரீ பிரசாத் இருவரும், ஏராளமான பிரேசில் மற்றும் சீன கலைஞர்களுடன் இணைந்து பாடுகின்றனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...