நாட்டில் பரபரப்பான சம்பவங்கள் ஏதுவும் நடந்துவிட்டால், உடனே அதை சினிமாவாக எடுத்துவிடுவார்கள். அந்தவகையில் நாடு முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய அன்ன ஹசாரேயின் போராட்டத்தை சினிமாவாக எடுக்க இருக்கிறார்கள்.
ஊழலை ஒழிக்கவும், வலுவான லோக்பால் மசோதா அமைக்க வலியுறுத்தியும் தொடர்ந்து 12நாளாக உண்ணாவிரதம் இருந்து, கடைசியில் அதில் வெற்றி பெற்று இந்திய வரலாற்றில் இடம்பெற்று விட்டார் காந்தியவாதி அன்னா ஹசாரே.
இந்நிலையில் ஹசாரேயின் போராட்டத்தை பிரபல டைரக்டர்கள் சுமித்ரா பாவே மற்றும் சுனில் சுதாங்கர் ஆகியோர் மராத்தி சினிமாவாக தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு "அந்தோலன் ஆக் தாஹா திவாஸ்" (பத்து நாள் போராட்டம்) என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இதுகுறித்து சுமித்ரா பாவே, சுனில் சுதாங்கர் கூறும் போது, "நாடு கண்ட, அரசியல் சார்பற்ற முதலாவது போராட்டம் இது தான்.
லஞ்ச ஊழலுக்கு எதிராக பல போராட்டங்களைச் சந்திக்கிற ஒரு மத்தியதர குடும்பத்தினை சுற்றி இந்தப் படம் செல்கிறது.
ஆத்ம பரிசோதனையையும், தனி மனித வாழ்வின் ஒழுக்கத்தினையும் இந்தப் படம் மையப்படுத்திக் காட்டும் என்று கூறினர்.
0 comments:
Post a Comment