விஸ்வரூபம் 2ம் பாகம் டி.டி.எச்.களில் வெளிவராது - கமல்ஹாசன்


கமலின் ‘விஸ்வரூபம்’ படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கடந்த ஜனவரியில் ரிலீசானது. இஸ்லாமிய அமைப்புகள் இப்படத்தை எதிர்த்தன. 

அரசும் தடை விதித்தது. பின்னர் ஆட்சேபகரமான சீன்கள் நீக்கப்பட்டு படம் ரிலீசானது. 

‘விஸ்வரூபம்‘ வெளியானபோதே இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது என்று கமல் அறிவித்தார். அப்போதே இரண்டாம் பாகத்துக்கான பெரும் பகுதி காட்சிகளை கமல் படமாக்கிவிட்டார். 

முதல் பகுதி கதை அமெரிக்காவில் நடப்பது போன்று இருந்தது. அங்குள்ள தீவிரவாதிகளை கமல் அழித்து அந்த நாட்டை காப்பாற்றுவது போன்று திரைக்கதை அமைத்து இருந்தனர். 

இரண்டாம் பாகம் கதை இந்தியாவில் நடப்பது போல் உருவாகிறது. இதன் படிப்பிடிப்பு முக்கால் பங்கு முடிந்து விட்டது. ஆகஸ்டு 15-ந் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளதாக படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் வி.டி.வி.கணேஷ் தெரிவித்துள்ளார். 

3 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இதிலும் ஆண்ட்ரியாவே கதாநாயகியாக நடிக்கிறார். விஸ்வரூபம் முதல் பாகத்தை டி.டி.எச் மூலம் வெளியிட நினைத்த முயற்சிகள் பலன் அளிக்க வில்லை 

இதனால் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தை டி.டி.எச்.களில் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவ்வாறு எந்த முயற்சியிலும் இப்போதைக்கு ஈடுபடவில்லை என்று கமல் தெரிவித்துள்ளார். 

மேலும் விஸ்வரூபம் படம் தொடர்பாக பேசப்படும் பரபரப்பான சர்ச்சைக்குரிய செய்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தகவலை கமல்ஹாசனின் செய்தி தொடர்பாளர் நிகில் முருகன் உறுதிப்படுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...