தனுஷூடன் நயன்தாரா குத்தாட்டம்



ரஜினி, விஜய் ஆகியோரது படங்களில் ஒருபாடலுக்கு ஆடி‌யுள்ள நடிகை நயன்தாரா, இப்போது தனுஷ் தயாரிக்கும் எதிர்நீச்சல் படத்தில், தனுஷ் உடன் இணைந்து ஒரு ஆட்டம் போட்டு இருக்கிறார். 

நடிகர் தனுஷ் தயாரிப்பாளராக அவதரித்துள்ள படம் எதிர்நீச்சல். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், ப்ரியா ஆனந்த் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். துரை செந்தில் இயக்கியுள்ளார். 

கொலவெறி அனிரூத் இசையமைத்துள்ளார். வாலி, தாமரை, மதன் கார்க்கி ஆகியோருடன் சேர்ந்து இப்படத்திற்கு தனுஷூம் பாடல் வரிகள் எழுதியுள்ளார். 

அதுமட்டுமின்றி இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டமும் போட்டுள்ளார் தனுஷ். 

கூடவே தனுஷூடன் சேர்ந்து நயன்தாராவும் ஆடியிருக்கிறார். சத்தியமா நீ எனக்கு தேவையில்லை... என்று தொடங்கும் பாடலுக்கு தனுஷூம், நயன்தாராவும் அசத்தலாக ஆட்டம் போட்டுள்ளனர். 

இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...