சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜீத் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. நடிகர் அஜீத் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் படமான வலை(அதிகாரப்பூர்வ தலைப்பு அல்ல) படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
அதற்கு அடுத்தப்படியாக விஜயா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவன அதிபர், மறைந்த நாகிரெட்டியின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் ஒரு பிரம்மாண்ட படம் தயாராகிறது.
இப்படத்தில் அஜீத் தான் ஹீரோ, தமன்னா தான் ஹீரோயின். கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய சிவா தான் இயக்குகிறார்.
அஜீத், தமன்னாவுடன் விதார்த், பாலா, முனீஸ், சுஹைல், சந்தானம், அபிநயா, நந்தகி உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முன்னதாக இப்படம் கடந்த ஏப்-2ம் தேதி துவங்க இருந்தது.
அன்றையதினம் அஜீத், இலங்கை தமிழர்களுக்காக தமிழ் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றதால், இப்படத்தின் பூஜை 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
அதன்படி ஐதராபாத்தில் இப்படத்தின் பூஜை ஆரம்பமானது, அதனைத்தொடர்ந்து சில காட்சியும் படமாக்கப்பட்டது.
ஏப்-20ம் தேதி வரை ஐதராபாத்தில் முதற்கட்ட ஷூட்டிங் நடக்கிறது.
1 comments:
தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.
Post a Comment