கேடி பில்லா கில்லாடி ரங்கா - விமர்சனம்


பசங்க படத்தில் இயக்குனர் பாண்டிராஜால் அறிமுகம் செய்யப்பட்ட விமலும், "மெரினா படத்தில் அதே இயக்குனரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட சிவகார்த்திகேயனும், பாண்டிராஜ் இயக்கத்திலேயே இணைத்து நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் "கேடி பில்லா கில்லாடி ரங்கா".

கதைப்படி விமலும், சிவகார்த்திகேயனும் வேலை இல்லாத வெட்டி ஆபிஸர்கள். அரசியலில் சாதிக்க வேண்டும் என்பதற்காக உள்ளூர் மாஜி எம்.எல்.ஏ.வுக்கு அடி வருடிகளாக திரியும் இருவரும், காதலில் விழுந்தால் நட்பு கெட்டு போகும் என்பதால் பல பெண்கள் காதல் தூது விட்டும் அதை தவிர்த்து கட்ட பிரம்மச்சாரிகளாக வாழ்ந்து வருபவர்கள். 

இப்படிப்பட சூழலில் இருவருக்கும் காதல் வருகிறது. கூடவே கவுன்சிலர் ஆகும் ஆசையும் வருகிறது. அதற்காக பில்லாவும், ரங்காவும் அதாங்க விமலும், சிவகார்த்தியும் செய்யும் கேடித்தனமும், கில்லாடித்தனமும் தான் "கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மொத்த கதையும்! 

இது கூடவே க்ளைமாக்ஸில் அப்பா - மகன்கள் சென்டிமெண்ட்டையும் கலந்து கட்டி "கே.பி.கி.ர படத்தை கலர்புல்லாகவும், கருத்து புல்லாகவும் தந்திருக்கிறார் இயக்குனர்!

தேனி கேசவன் அலைஸ் பில்லாவாக விமல், தேனி என் சொந்த ஊர் இல்லை... தேனீ மாதிரி சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்பதால் தேனி கேசவன் என்று தனது இயற்பெயருக்கு சொல்லும் விளக்கமாகட்டும், பில்லா படத்தை டி.வி.யில் தன் தாய் பார்த்துக் கொண்டிருந்த போது பிரசவலி ஏற்பட்டு தான் பிறந்ததால் தனக்கு தானே பில்லா எனப் பட்டப்பெயர் சூட்டிக் கொண்ட கதையாகட்டும், ஒவ்வொன்றும் சீன் பை சீன் லாஜிக்காக லாபிங் (அதாங்க சிரிப்பு...) கை ஏற்படுத்துபவை! காதலே கூடாது எனும் கருத்துடைய விமல், பிந்து மாதவியை பார்த்ததும் அவரை அடைய பண்ணும் கேடித்தனங்கள் செம காமெடி!

பில்லா மாதிரியே ரங்கா சிவகார்த்திகேயனுக்கும் பெரிய ப்ளாஷ்பேக் உண்டென்றாலும் அதை பெரிதாக சீனாக்காமல், ஜெராக்ஸ் கடை பாப்பா(இதாங்க கேரக்டர் பெயர்) ரெஜினாவுக்காக தேவுடு காக்கும் சிவகார்த்திகேயனின் சில்மிஷங்கள் சுவாரஸ்யம்! அரசியல், காதல் என அனைத்து களத்திலும் இவரது மிமிக்கிரி வாய்ஸ் மாடுலேஷன் கூடுதல் பலம்!

கராத்தே தெரிந்த நாயகி பிந்து மாதவி, காமெடி தெரிந்த ரெஜினா இருவருமே கேடி கில்லாடிகளின் ஜோடிகளாக சூப்பர்ப்! பரோட்டா சூரி, டெல்லி கணேஷ், மனோஜ் குமார், மகேந்திரன், நமோ நாராயணன், சுஜாதா உள்ளிட்டோரும் அவர்களது பாத்திரங்களும் படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கின்றன!

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, விஜய்யின் ஒளிப்பதிவும், அத்தியப்பன் சிவாவின் படத்தொகுப்பு உள்ளிட்டவை தொழில்நுட்ப ரீதியில் "கேடி பில்லா கில்லாடி ரங்காவை தூக்கி நிறுத்துகின்றன!

ஓப்பனிங் சீனிலேயே "நாளை‌யோட குடியை விடுறோம் மச்சி... என்று விடாமல் விமல், சிவகார்த்தி அண்ட்‌ கோவினர் குடித்தபடியே இருப்பதின் நீளத்தை சற்றே குறைத்திருக்கலாம்! 

மற்றபடி பாடல் காட்சியில் கூட கண்டியூனிட்டி மிஸ் ஆகாமல் பாடல் காட்சி தானே, என்று விமலின் கையில் இருந்த அர்ச்சனை பையை விட்டு விடாமல், அடுத்த சீனுக்கு எடுத்து வரும் வரை பாடல் காட்சியிலும் ஒருமுறை காட்டும் பாண்டிராஜின் எழுத்து-இயக்கத்தில் 2 மணி நேரம் படம், 20பது நிமிடம் பாடம் என வெளிவந்திருக்கும்

"கேடி பில்லா கில்லா ரங்கா" கருத்து "வெடி - காமெடி கில்லாடி!" பேஷ்... பேஷ்!!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...